உகாண்டா நாட்டில் அதிபரான யோவேரி முசவெனி (President Yoweri Museveni) மற்றும் 53 யூத நிறுவன பிரிதிநிதிகள் (அமெரிக்கா சார்ந்த நிறுவனப்பிரிதிநிதிகள்) (53 Jewish organisations - based in the US) சந்திப்பு இன்று (14-02-2019) என்டபியில் உள்ள ஸ்டேட் கவுஸ்-ல் (State House, Entebbe) வைத்து நடைபெற்றது.

அதிபர் முசவெனி பேசும் போது, "மத்திய கிழக்கு நாடுகளில் உகாண்டாவின் நிலைப்பாடு பைபிளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைந்திருக்கிறது. உகாண்டா, "இணைந்து செயல்படும் உறவுமுறை" (Symbiotic Relations) கொள்கையை பேணுகிறது. உலகில் மற்ற பகுதிகளில் சமாதானத்தை அதிகரிக்க நல்ல மாதிரியாக இருக்க வேண்டும்." என்று கூறினார்.

இந்த சந்திப்பில் அதிபர் முசவெனி, யூத பிரிதிநிதிகளுடன், முதலீட்டு வாய்ப்புகள், வேளாண்மை செயலாக்கம், கனிமவளங்கள் பதப்படுத்துதல், உயர்தர உற்பத்தி மற்றும் சிறப்பு சேவைகள் குறித்து பேசப்பட்டது. குறிப்பாக மருத்துவம் மற்றும் சுற்றுலாத்துறை குறித்து விவாதிக்கப்பட்டது.


0 Comments