தமிழகத்தின் பிரபல தமிழ் புத்தகப் பதிப்பாளர் முனைவர் ரவி தமிழ்வாணன் நாளை (12-11-2017) கம்பாலா வருகிறார்.

நாளை மாலை 6 மணி அளவில், கம்பாலா புகாண்டா சாலையில் உள்ள படிடார் சமாஜனில் (Patidar Samajan, Buganda Road, Kampala) வைத்து நடைபெறும் விழாவில், மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தக வெளியீட்டு விழாவும், பயனுள்ள பல்வேறு புத்தகங்களின் விற்பனை கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் முனைவர் ரவி தமிழ்வாணன் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டு, சிறப்புரையும் வழங்குகிறார்.
கல்கண்டு தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள் புத்தகமும், சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பாலா வந்திருந்த முனைவர் லேனா தமிழ்வாணன் எழுதிய முன்னேற்ற நூல்கள் உள்ளிட்ட 16 நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
எனவே, உகாண்டா வாழ் அனைத்து தமிழ் நல்லுள்ளங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுங்கள். நிகழ்ச்சி தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு, +256 751 306838, +256 754 250426 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளவும்.
0 Comments