உகாண்டா உற்பத்தியாளர்கள் சங்கம் (Uganda Manufactures Association (UMA)) சார்பில் 25-வது உகாண்டா சர்வதேச வர்த்தக கண்காட்சி (Uganda International Trade Fair (UGITF)) அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. வர்த்தக கண்காட்சி, கம்பாலா, லுகோகோ மைதானத்தில் (UMA Show Ground, Lugogo) வைத்து நடைபெறுகிறது.
இதில் பொது தொழில்துறை மற்றும் உற்பத்தியாளர்கள், மின் பொறியியல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், பெட்ரோலிய தயாரிப்புகள், பிளாஸ்டிக், ரப்பர், மரத் தயாரிப்புகள், லெதர் தயாரிப்புகள், வியாபார சேவைகள், தொலைதொடர்புகள், விவசாய தயாரிப்புகள், கனரக இயந்திரங்கள், கட்டுமான தளவாட தயாரிப்புகள், ஜவுளி தயாரிப்புகள் சுற்றுலா, உணவு மற்றும் கல்வி தொடர்பான அனைத்து விதமான சேவைகள் பற்றிய கண்காட்சிகள் இடம் பெறுகிறது.

கண்காட்சியில் உற்பத்தியாளர்கள், தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவையினை அபிவிருத்தி செய்ய (Promote), உகாண்டா உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: +256 785 038105, +256 703 552444, 0414 221 034, Email ID: marketing@uma.or.ug, tradefair@uma.or.ug