அஜித் குமார் நடித்த, சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் வழங்கும் “விவேகம்” திரைப்படம் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியிடப்படுகிறது.
கம்பாலா, அகாசியா மாலில் (Acacia Mall) உள்ள “Century Cinemax” திரையரங்கில் வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 26-ம் தேதி மாலை 7 முதல் காட்சியும், 27-ம் தேதி பகல் 2.30 மணிக்கு 2-வது காட்சியும் வெளியிடப்படுகிறது. 2 காட்சிகள் மட்டும் காண்பிக்கப்படுகிறது.

“விவேகம்” திரைப்படத்தில் அஜித் குமாருடன், ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிவா இயக்கிய இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் பல்கேரியா, நார்வே உள்பட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் (Action) திரைப்படமாகும்.