குவைத் மன்னர் அல்-சபா கத்தாருக்கும், அரபு நாடுகள் சிலவற்றிற்கும் இடையே ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க ஜெட்டா (சவூதி அரேபியா) நகருக்கு பயணம் செய்வதாக அரசு ஊடகம் தெரிவித்தது.

அங்கு அவர் பல நாட்டு உயரதிகாரிகளை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முன்பு ஒருமுறை 2014 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா தலைமையின் கீழ் சில நாடுகளுக்கு கத்தாருடன் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க மத்யஸ்தம் நடத்தியுள்ளார்.
வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பிலுள்ள சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாக்ரைன், எகிப்து மற்றும் ஏமன் ஆகியன கத்தாருடன் தூதரக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தன. இதனிடையே கத்தாரின் அரசர் அல்-தானி அல்-ஜசீரா தொலைக்காட்சியில் ஆற்ற இருந்த உரையை அல்-சபாவின் வேண்டுகோளால் ஒத்திவைத்துள்ளதாக கத்தாரின் அயலுறவு அமைச்சர் கூறினார். தனது சகாவான கத்தாரின் அரசரிடம் ‘பொறுமையை கடைபிடிக்கும்படி’ கோரியதாகவும், “சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒரு வாய்ப்பு’ தரும்படியும் கோரியதாகவும் குவைத் அரசு ஊடகம் கூறியது.
இதில் குறிப்பிடும்படியானது குவைத்தும் ஒரு வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் உறுப்பினர் என்பதும், மற்ற உறுப்பு நாடுகளை போல கத்தாரிடம் உறவை முறித்துக்கொள்ளவில்லை என்பதேயாகும்.
0 Comments