உகாண்டாவில் உள்ள பிரபல வங்கி “க்ரேன் பாங்க்” (Crane Bank). இந்த வங்கியின் நிர்வாக பொறுப்புகளை உகாண்டாவில் உள்ள “உகாண்டா அபிவிருத்தி நிதி நிறுவன வங்கி” (Development Finance Company of Uganda (DFCU) Bank)
முழுமையாக கையகப்படுத்தி கொண்டது.

கிரேன் வங்கியின் பொறுப்புகளை சீரமைக்கும் முயற்சியில, under Sec 95(1)(b) of FIA (Financial Institutions Act) இன் படி, அனைத்து பொறுப்புகள் (வைப்புகளையும் (Deposit) சேர்த்து) DFCU வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது.
உகாண்டா வங்கி (Bank of Uganda) கவர்னர் இம்மானுவேல் முடெபிலே (Emmanuel Mutebile), கிரேன் வங்கியின் சொத்துக்களை DFCU வங்கிக்கு தெரிவித்ததாக வெள்ளிக்கிழமை (27-01-2017) கூறினார். க்ரேன் வங்கி கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்கள் DFCU வங்கி மூலம் இயக்கப்படும் எனவும், சேமிப்பாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும், நிதித்துறையில் ஸ்திரத்தன்மை தொடரும் எனவும் கூறினார்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில், க்ரேன் வங்கியின் நிர்வாகத்தை எடுத்து கையகப்படுத்தும் காரணங்களை பற்றி நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


0 Comments