ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு புதி தாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் ஏற்கனவே அச்சிடப் பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் வங்கி களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது. அப்போது புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பொதுமக்களுக்கு கொடுக் கப்பட்டன.

புதிய ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட போதிலும் இதுவரை அந்த நோட்டுகள் மக்களிடம் புழக்கத்துக்கு விடப்பட வில்லை. ஏற்கனவே உள்ள பழைய ரூ.500 நோட்டுகளுடன் புதிய ரூ.500 நோட்டுகளும் கலந்து குழப்பமான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதிய ரூ.500 நோட்டுகள் வினியோகம் தாமதப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் திங்கட்கிழமை (14-11-2016) முதல் தமிழ்நாட்டில் புழக்கத்துக்கு வரும் என்று தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து நாளை ரூ.500 புதிய நோட்டுகள் வங்கிகளுக்கு வந்து சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதனால் திங்கட்கிழமை முதல் ரூ.100, ரூ.2000 நோட்டுகளுடன் புதிய ரூ.500 நோட்டுகளும் வழங்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய ரூ.500 நோட்டு புழக்கத்துக்கு வந்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதி குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.